சம்பா ரவை பாயசம் செய்ய...!

Sasikala|
தேவையானவை:  
 
சம்பா ரவை - ஒரு கப்
துருவிய வெல்லம் - ஒரு கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:  
 
2 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சம்பா ரவையை  ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு வறுத்து, 2 கப் நீர் விட்டு வேகவிடவும். 
 
ரவை வெந்ததும், வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். இதில் தேங்காய்ப் பால், அல்லது வெறும் பால் சேர்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :