1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

செட்டிநாட்டு சிறப்பு கந்தரப்பம் செய்ய...

கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு  முக்கிய பலகாரம்.
 
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
உளுந்து - 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
தேங்காய் துருவியது - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு
வெல்லம் - 1 கப் பொடித்தது

 
செய்முறை:
 
அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1  வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
 
கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணெயின் நடுவில் மெதுவாக  உற்றவும். ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும். இது போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும். சுவையான செட்டிநாட்டு சிறப்பு கந்தரப்பம் தயார்.