வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

பருப்பு பாயசம் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பாசிபருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - ஒரு கைப்பிடி
பச்சரிசி - ஒரு கைப்பிடி
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய், முந்திரி

 
செய்முறை:
 
வாணலியில் பருப்புகளை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் வறுத்த பருப்பு, அரிசி சேர்த்து தேவையான  அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
 
வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிக்கட்டவும். தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து  எடுத்துக் கொள்ளவும்.
 
வெந்த பருப்பு அரிசி கலவையில் காய்ச்சிய வெல்லத்தை ஊற்றவும். பின்னர் அரைத்த தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும்  இறக்கவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். சுவையான பருப்பு பாயசம்  தயார்.