ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

கிராமத்து ஸ்பெஷல் பொரி விளங்காய் உருண்டை செய்ய...!

தேவையானவை: 
 
புழுங்கலரிசி - 100 கிராம்
கோதுமை - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை (தோல நீக்கியது) - 1கப்
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
லவங்கம் - 5
சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு (துருவி (அ) நறுக்கி நெய்யில் வதக்கியது)
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
பாகு வெல்லம் - 200 கிராம்
நெய் - சிறிதளவு

 
செய்முறை: 
 
புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மாவாக்கவும். கோதுமையையும் வறுத்து மாவாக்கவும். இந்த மாவுகளுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, வதக்கிய தேங்காய், லவங்கம் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். வெல்லத்தில்  சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்த வுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பாகுக்கு  விடுவதைக் காட்டிலும் ஒரு கொதி அதிகமாக வர விட்டு, நெய் சேர்க்க வும். பிறகு, மாவுக் கலவையில் கொட்டி, நன்கு  புரட்டவும். கையில் அரிசி மாவு தொட்டு, மாவுக் கலவையை உருண்டை களாக பிடிக்கவும்.
 
குறிப்பு: 
 
உருண்டை தளர இருப்பின், அந்த உருண்டை பிடிக்கும் மாவிலே ஒரு முறை புரட்டி எடுத்து செய்ய வேண்டும். உருண்டை சரியாக வரும். மாதக் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இதை வெறும் பல்லால் கடித்து சாப்பிடுவது கடினம். உடைத்துதான் சாப்பிட வேண்டும்.