திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

ஓணம் ஸ்பெஷல் அட பிரதமன் செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - ஒரு கப்
வெல்லம் - 100 கிராம்
தேங்காய் - ஒன்று
முந்திரி, திராட்சை - தலா 10
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை: 
 
தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி  பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்பு சிறு சிறு துண்டுகளாக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் அடை துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு வெல்லக் கரைசல், ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். சுவையான அட பிரதமன் தயார். கேரளாவின் பாரம்பரியமான உணவு இது.
 
குறிப்பு: ரெடிமேட் அடை துண்டுகளும் கடைகளில் கிடைக்கிறது. இதனை கொண்டும் செய்யலாம்.