திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

அனைவருக்கும் பிடித்த அவல் பாயாசம் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
அவல் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 1
முந்திரிப்பருப்பு - 5
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
 
வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.
 
பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். பால் நன்றாக கொதித்து சுட்டி வரும்போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.
 
1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும். ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும். வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம். சுவையான அவல் பாயாசம் தயார்.
 
குறிப்பு: அவல் நன்கு வெந்தவுடன் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் சேர்த்த பின் அவல் சேர்க்கும்போது அசல் வேகாமல்போகும்.