வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (08:06 IST)

பினராயி விஜயன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: முடிவு என்ன?

கேரளாவில் ஸ்வப்னா என்ற பெண் தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து கேரல மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் கேரளாவில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது 
 
கேரளாவில் தங்க கடத்தல் உள்பட பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை பினராய் விஜயன் அரசு செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி இது குறித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை நேற்று சட்டமன்றத்தில் கொண்டு வந்தது 
 
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் கட்சிகளின் விவாதங்களுக்கு பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. விவாதங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்தபோது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் விவாதத்திற்குப் பின்னர் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு நடைபெற்றது. இந்த வாக்களிப்பில் அரசுக்கு ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக 40 பேர்களும் வாக்குகளும் பதிவாகின. பெரும்பான்மைக்கு  தேவையானதை விட அதிக வாக்குகள் பினரயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு கிடைத்து விட்டதால் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் நிலவிவந்த அரசியல் குழப்பத்திற்கு தற்போது முடிவு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது