வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (18:17 IST)

சுமந்திரன் மூன்று முக்கிய விடையங்களை வேண்டாம் என்றால் எதனைக் கேட்கின்றார்?

சுமந்திரன் மூன்று முக்கிய விடையங்களை வேண்டாம் என்றால் எதனைக் கேட்கின்றார்.




1. சுமந்திரன் சொல்வது வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகாது என்றால் வடகிழக்கு பிரிக்கப்படும்.

2. சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் என்றால், நாம் எல்லோரும் சிங்கள பௌத்தத்திற்கு அடிமைகள் என்பதுதானே கருத்து. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் எல்லாம், பௌத்தத்திற்கு அடிமையாக இரண்டாம் தரப்பாகும். இது சிங்கள இனத்தை தமிழரை விட உயர்ந்த இனமாக்கும்.

3. “எக்கிய ராச்சிய” என்றால் unitary state தமிழல் ஒற்றையாட்சி.  இதன் கருத்து சமஷ்டி (கூட்டாட்சி) என்பதில்லை.

ஒற்றையாட்சி என்பது சிங்களவர் எந்த சட்டத்தையும் உருவாக்கலாம், அழிக்கலாம். தமிழருக்கு ஒரு உரிமையும் இல்லை என்பது தான் அர்த்தம். சிங்களவர் தயவில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழலாம்.1972 இல் எக்கிய ராச்சிய (ஒற்றையாட்சி) தான்அரசியல் அமைப்பில் சிங்களத்தில் இருந்து வந்துள்ளது. இது கூட்டாட்சியில் (சமஷ்டி) இல்லை என்பதனை சுமந்திரனுக்கு எடுத்து கூறுங்கள்.புதிய அரசியல் அமைப்பில் வடகிழக்கு பிரிப்பு, ஒற்றையாட்சி, சிங்கள பௌத்த மதத்திற்கு முதலிடம் என்று எல்லாவற்றினையும் விட்டுக்கொடுத்துவிட்டு தமிழர்களுக்கு சுமந்திரன் எதனை எடுக்கப்போகின்றார்?

அத்துடன் சிங்களவர்களுக்கு தாம் நெழிந்து வழைந்து போகவும் தயார் என்றால், சுமந்திரனுக்கு மூளை இல்லை என்பதுதான் பொருள். இவரை யார் “Smart Man” என்று அழைத்தது. இவர் ஒரு புத்தி குறைந்தவர் (Fool)14 ஊமைகளும், சுமந்திரனை அரசியல் தீர்வு பொறுப்பாளர் , மற்றும் TNA பேச்சாளர் பதவியில் இருந்து விலக்க வேண்டும். இல்லாவிடில் வடகிழக்கு மக்கள் இந்த 14 ஊமை எம்.பி களையும் பதவியில் இருந்து அகற்ற வேண்டும்.
குறிப்பு: சுமந்திரன் அமெரிக்காவில், ராஜாங்க அமைச்சில் வந்து கதைக்கும் போது பல அமெரிக்கர் இவரது ஆங்கிலம் புரியவில்லை என தமக்குள் பேசிக் கொள்வார்கள்.

சுமந்திரன் எல்லாவற்றினையும் விட்டுகொடுத்துவிட்டார் என்று ரணில் செப்டெம்பர் 23, 2017 இல் கூறியுள்ளார். ஆகவே சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் கதைத்தது எல்லாம் பொய்யும் பித்தலாட்டமுமே