வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2017 (19:39 IST)

இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு

தமிழக மீனவரை நடுக்கடலில் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 

 
ராமேஸ்வரம் மீனவர் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அப்பகுதி மீனவர்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் இந்த தக்குதல் நடந்த வில்லை என இலங்கை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.
 
ஆனால் அவர்கள் போராட்டத்தில் கைவிடும் நிலையில் இல்லை. இந்நிலையில் தற்போது கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்த மீனவர் பிரிட்ஜோ உடன் சென்ற கிளிண்டன் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இறந்தவர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட புல்லட் இலங்கை கடற்படையினரால் பயன்படுத்தப்படுவது என்பது உறுதியாகி உள்ள நிலையில், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.