ரகளையில் இலங்கையர்கள்; மைதானத்தில் குட்டி தூக்கம் போட்ட தோனி: வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:09 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது.
 
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதலில் சிறிது தடுமாறினாலும், பின்னர் ரோஹித் சர்மா தோனி கூட்டணியில் வெற்றியை நோக்கி நகர்ந்தது.
 
44 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென இலங்கை ரசிகர்கள் ஆத்திரத்தில்  மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
 
இதனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், களத்தில் இருந்த தோனி இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் மைதானத்தில் ஒரு குட்டி தூக்கம் போட்டார். 
 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி தன்னை மிஸ்டர் கூல் என மறுபடியும் நிரூபித்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
 


இதில் மேலும் படிக்கவும் :