வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (13:52 IST)

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு? மலிங்கா பேட்டி!!

இலங்கை- இந்திய அணிகள் மோதிய நான்காம் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக மலிங்கா செயல்பட்டார். இந்த போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.


 
 
இதனால் கேப்டன் என்ற முறையில் தோல்விக்கான காரணங்களையும் தனது ஓய்வு குறித்தும் மலிங்கா சமீபத்தில் பேசியுள்ளார்.
 
இது குறித்து மலிங்கா கூறியதாவது, அணியில் அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பது பலவீனமாகவே உள்ளது. இலங்கை அணியில் என்னோடு சேர்த்து மூன்று வீரர்கள் மட்டுமே அனுபவம் வாய்ந்தவர். ஆனால் இத்திய அணியில் அப்படி இல்லை.
 
காயம் காரணமாக 16 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் போனதால் என்னால் ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிக்கு எதிராக சரியாக விளையாட முடிவில்லை.
 
இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு, என்னை நானே மதிப்பீடு செய்ய விருப்புகிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் அணிக்காக விளையாடுவேன் என தெரியாது. ஆனால், எனது உடல் ஒத்துழைக்காமல் போகும் போது எனது ஓய்வை நானே அறிவிப்பேன் என கூறியுள்ளார்.