ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் !!

Last Modified செவ்வாய், 18 டிசம்பர் 2018 (16:24 IST)
ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலம் ஜெய்ப்பூரில் சற்று முன்னர் ஜெய்ப்பூரில் தொடங்கியது.
 

போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் நடைபெறும் நாடு குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கள் அணியில் விளையாடிய வீரர்களில் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அணிகள் கழட்டி விட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் சற்று முன்னர் நடந்தது.
 
இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய சூப்பர்ஸ்டார் யுவ்ராஜ் சிங்கை எந்த அணியும் இதுவரை அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அவரைப்போலவே இன்னும் சில சீனியர் வீரர்களும் ஏலத்தில் விலைபோகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

யுவ்ராஜ், சென்ற ஆண்டு அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் ஒரு காலத்தில் 16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவ்ராஜ். சென்ற ஆண்டு முழுவதும் சரியாக விளையாடாமல் சொதப்பியதால் இந்த ஆண்டு அவரின் அடிப்படை விலை குறைக்கப்பட்டு 1 கோடியாக நிர்னயிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்
 
1, ஹனுமா விஹாரி – 2 கோடி
2.ஹெட்மைர் -4.2 கோடி
3. பிராத்வெய்ட் -5 கோடி
4. குர்கீரத் சிங் மான் – 50 கோடி
5.மோய்சஸ் ஹெண்ட்ரிக்யூஸ் – 50 லட்சம்
 
ஏலத்தில் விலை போகாத வீரர்கள்
 
1.மனோஜ் திவாரி
2. புஜாரா
3. அலெக்ஸ் ஹேல்ஸ்
4.மெக்கல்லம்
5. குப்தில்
6. க்ரிஸ் வோக்ஸ்
7. க்ரிஸ் ஜோர்டான்
8. யுவ்ராஜ் சிங்இதில் மேலும் படிக்கவும் :