வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (09:11 IST)

புதியப் பேர், புதிய சீருடையோடு களமிறங்கும் டெல்லி அணி – ஐபிஎல் 2019 அப்டேட்

2019 ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி அணியின் பெயரை மாற்றியுள்ளதாக அணி நிர்வாகத்தினர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் குறைந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அணிகளில் டெல்லியும் ஒன்று. சேவாக், கம்பீர், டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இருந்தவரை சிறப்பாக விளையாடிய அணி அதன் பின்னர் அட்டவணையில் கடைசி இடமோ அல்லது இரண்டாவது கடைசி இடமோதான் பெற்று அவ்ருகிறது.

எனவே இந்தாண்டு அந்த அணியின் பல வீரர்கள் கழட்டி விடப்பட்டுள்ளனர். அணி நிர்வாகத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பங்கு தாரர்கள் மாறியுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி அணியில் 50% பங்குகளை வாங்கியது ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ். இவர்கள் அணியின் பெயர் மற்றும் சீருடையை மாற்றவேண்டும் எனக் கூறியதால் தற்போது டெல்லி அணிக்குப் புதியப் பெயர் மற்றும் புதிய சீருடை மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ் என்று அழைக்கப்பட்ட டெல்லி அணி இனி டெல்லி கேப்பிடல்ஸ் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்தியாவின் தலைநகர் என்பதைக் குறிக்கும் வண்ணம் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.