1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 டிசம்பர் 2018 (12:53 IST)

அடிமாட்டு விலையில் யுவ்ராஜ் – ஐபிஎல் 2019 ஏல விவரம்

ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் நடைபெறும் நாடு குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கள் அணியில் விளையாடிய வீரர்களில் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அணிகள் கழட்டி விட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கான ஏலம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதில் பங்கேற்கவுள்ள வீரர்களின் அடிப்படை விலையை பிசிசிஐ நிர்னயித்துள்ளது. மொத்தம் 346 கிரிக்கெட் வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர். அதில் 226 பேர் இந்திய வீரர்கள் ஆவர்.

இதில் லசித் மலிங்கா, மெக்கல்லம், கோரி ஆண்டர்சன் உள்ளிட்ட 9 வீரர்கள் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் அடிப்படையாய்க் கொண்டுள்ளனர். இந்த 9 வீரர்களில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களில் அதிகபட்ச அடிப்படை விலை நிர்னயிக்கப்பட்டுள்ளவர் ஜெயதேவ் உனட்கட் ஆவர். இவரின் ஆரம்ப விலை 1.5 கோடி. இந்திய நட்சத்திர வீரரும் முன்னாள் உலகக் கோப்பை நாயகனுமான யுவ்ராஜ் சிங்கின் அடிப்படை விலை 1 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் 16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவ்ராஜ் சென்ற ஆண்டு அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். சென்ற ஆண்டு முழ்வதும் சரியாக விளையாடாமல் சொதப்பியதால் அவரின் ஆரம்ப விலை இந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.