70 வீரர்கள் டிசம்பர் 18-ல் ஏலம் -ஐ.பி.எல் 2019 அப்டேட்

Last Modified செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:20 IST)
ஐ.பி.எல் 2019 ஆம் ஆண்டுகான வீரர்கள் ஏலம் டிசம்பர் 18 ஆம் தேதி ஜெய்பூரில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தல் காரணமாக ஐ.பி.எல் 2019 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் இந்தியாவில் நடக்காது என்பது உறுதியாகி விட்டது. எதாவது ஒரு வெளிநாட்டில் நடக்கும் என இந்தியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் எந்த நாடு என்பது குறித்து அறிவிக்கவில்லை.

கடந்த ஆண்டுத் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் சிலரைத் தக்க வைத்துக்கொண்டு பலரை எல்லா அணிகளும் கழட்டி விட்டுள்ளனர். இதனால் அடுத்த அண்டுக்கானப் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஜெய்ப்பூரில் வீரர்களுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இதில் 50 வீரர்கள் மற்றும் 20 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 70 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :