ஞாயிறு, 6 ஏப்ரல் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது ஆர் சி பி. ஆனால் நேற்றைய போட்டியில் அந்த அணியின் சிறப்பாக அமையவில்லை.

முதலில் பேட் செய்த ஆர் சி பி அணியில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி ஆட்டமிழக்க ஒரு கட்டத்த்தில் அந்த அணி 100 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. ஆனால் பின் வரிசையில் லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியால் கௌரவமான ஸ்கோராக 169 ரன்கள் சேர்த்தது. ஆனால் அந்த இலக்கை இரண்டே விக்கெட்களை இழந்து குஜராத் எளிதாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் க்ருணாள் பாண்ட்யாவின் விக்கெட்டை வித்தியாசமான ஒரு பந்து மூலமாக வீழ்த்தினார் குஜராத் சுழலர் சாய் கிஷோர். அந்த பந்து பற்றி பேசியுள்ள அவர் “டி 20 போட்டிகளில் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அந்த பந்தை நான் நான்கு ஆண்டுகள் பயிற்சி செய்து வந்தேன். ஆனால் எங்கும் பயன்படுத்தியதில்லை. இன்றுதான் பயன்படுத்தினேன். இது கேரம் பந்து போலதான். ஆனால் அதற்கு எதுவும் பெயர் எல்லாம் இல்லை. இனிமேல் நான்தான் எதாவது பேர் வைக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.