செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (07:57 IST)

யுவ்ராஜை கழட்டி விட்ட பஞ்சாப் – ஒட்டுமொத்தமாக 11 வீரர்கள் விடுவிப்பு!

அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக தங்கள் அணியில் இருந்த  11 வீரர்களை விடுவித்துள்ளது பஞ்சாப் அணி நிர்வாகம்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்திய பாராளுமன்ற தேர்தல் காரணமாக வெளிநாட்டில் நடக்க இருக்கிறது. மார்ச் 23 –ந்தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் 2019 எந்த நாட்டில் நடைபெறும் என்ற விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தங்கள் அணியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அணி நிர்ர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. அதை முன்னிட்டு தங்கள் அணியில் உள்ள ஃபார்ம் அவுட் வீரர்களைக் கழட்டிவிடும் வேலையில் இறங்கியுள்ளனர். அதில் தற்போது பஞ்சாப் அணி நிர்வாகம் தனது அணியில் இருந்த 11 வீரர்களை விடுவித்துள்ளது.

அதில் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங், ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச், அக்ஸர் படேல், மோஹித் ஷர்மா, பரீந்தர் ஸ்ரன்ம் டுவர்ஷூஸ், மனோஜ் திவாரி, அக்‌ஷீப் நாத், பர்தீப் சாஹு, மயாங் டகார், மன்சூர் தார் ஆகிய வீரர்கள் அடக்கம். இதில் பஞ்சாப்பின் மைந்தன் யுவ்ராஜ் அந்த அணியில் கழட்டி விடப்பட்டது பஞ்சாப் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை அளித்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவ்ராஜ் 8 போட்டிகளில் விளையாடி 65 ரன்களே சேர்த்துள்ளார். அவரது சராசரி 10. ஸ்ட்ரைக் ரேட் 89. அவரது மோசமான ஃபார்ம் மற்றும் வயது முதிர்வு காரணமாகவே அவர் அணியில் இருந்து கழட்டிவிடப் பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.