சி.எஸ்.கே. சில் யுவ்ராஜ் :தோனி -யுவி காம்போ ரசிகர்கள் விருப்பம்…

Last Modified சனி, 15 டிசம்பர் 2018 (08:10 IST)
ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலம் ஜெய்ப்பூரில் வரும் 18 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மொத்தம் 346 வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கின்றன.

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் நடைபெறும் நாடு குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கள் அணியில் விளையாடிய வீரர்களில் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அணிகள் கழட்டி விட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கான ஏலம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனும் உலகக்கோப்பை நாயகனுமான யுவ்ராஜை அவரது சொந்த மாநில அணியான பஞ்சாப் கழட்டிவிட்டதால் அவரது பெயரும் ஏலத்தில் உள்ளது.

யுவ்ராஜ், சென்ற ஆண்டு அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் ஒரு காலத்தில் 16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவ்ராஜ். சென்ற ஆண்டு முழுவதும் சரியாக விளையாடாமல் சொதப்பியதால் இந்த ஆண்டு அவரின் அடிப்படை விலை குறைக்கப்பட்டு 1 கோடியாக நிர்னயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏலம் தொடங்க இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டிவிட்டரில் தனது ரசிகர்களுடன் இந்த ஆண்டு எந்த வீரரை நீங்கள் மஞ்சள் நிற ஜெர்சியில் காண ஆவலாக உள்ளீர்கள் எனக் கேள்வியெழுப்பியது. அதற்குப் பெருவாரியான ரசிகர்கள் யுவ்ராஜ் என பதிலளித்துள்ளனர். இதனால் சி.எஸ்.கே. வில் யுவ்ராஜ்- தோனி காம்போ மீண்டும் இணைய வாய்ப்பு அதிகமாகி உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :