வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (09:36 IST)

இந்திய அணியின் வெற்றி இன்றும் தொடருமா?

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும் முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இதற்காக இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இன்று 6வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா சில போட்டிகளில் தடுமாறினாலும் கடந்த போட்டியில் சதமடித்து நம்பிக்கை ஊட்டியுள்ளார். அதேபோல் ஷிகர் தவான், கோஹ்லி ஆகியோர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சை பொருத்தவரையில் சேஹல், குல்தீப் ஆகியோர் இந்திய அணிக்கு பலமாக இருந்து வருகின்றனர். எனவே இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் ஒரு தொடரில் 5 ஆட்டங்களில்  ஆஸ்திரேலியா அணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவை அடுத்து அந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது