நீரவ் மோடி மீது நடவடிக்கையே எடுக்க முடியாது! ஏன் தெரியுமா?
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ280 கோடி மோசடி செய்தவர் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி. அதைத் தொடர்ந்து ரூ11,400 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக நீரவ் மோடி மீது அடுத்த புகார் கிளம்பியுள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ள நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒரு திடுக்கிடும் தகவலாக நீரவ் மோடி என்பவர் ஒரு இந்திய பிரஜையே இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஒரு பெல்ஜியம் நாட்டின் குடிமகன் என்று தற்போது அறியப்பட்டுள்ளது.
இந்திய பிரஜை இல்லாத ஒருவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை செய்து தண்டனை பெற்று தருவதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதாகவும், அப்படியே அதற்கு முயற்சி செய்தாலும் விசாரணை முடிய பல வருடங்கள் ஆகும் என்றும் அப்படியே விசாரணை முடிந்து குற்றவாளி என்று நிரூபணம் ஆனாலும் மிக மிக குறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.