திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:55 IST)

பிரியங்கா சோப்ராவையும் விட்டு வைக்காத நீரவ் மோடி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பஞ்சாப் வங்கியில் முறைகேடு செய்துள்ள நீரவ் மோடி மீது புகார் அளித்துள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கியின் போலி உத்தரவாத கடிதம் மூலம், 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளார் நீரவ் மோடி, இவரது வைர நகை வடிவமைப்பு நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பாசிடராக பிரியங்கா சோப்ரா இருந்தார்.
 
இந்நிலையில் நீரவ் மோடி நிறுவன விளம்பரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார், இவருக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிரியங்கா சோப்ரா நீரவ் மோடி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இவரைப் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நீரவ் மோடி மீது வழக்குத் தொடர முடிவெடுத்திருக்கிறார்.