தொடர்புடைய செய்திகள்
- சென்னை அணியுடன் எப்போதும் இணைந்து இருப்பேன்: வெற்றிக்கு பின் தோனி பேட்டி..!
- 10 முறை அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன்: தோனிக்கு குவியும் வாழ்த்து..!
- குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை கிங்ஸ் அணி!
- ஐபிஎல்-2023; ருதுராஜ், கான்வே அதிரடி ஆட்டம்...குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்
- எம்ஜிஆர், ரஜினி போல் தோனியும் சூப்பர் ஹீரோ தான்.. பிரபல வர்ணனையாளர்..!
அடிக்கடி பீல்டிங்கை மாற்றுவது ஏன்? வெற்றிக்கு பின் தோனி பேட்டி..!
தோனி அடிக்கடி பீல்டிங்கை மாற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஏன் மாற்றுகிறேன் என்பது குறித்து நேற்றைய வெற்றிக்கு பின் அவர் பேட்டி அளித்தார்.
ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப அடிக்கடி பில்டிங் செட்டிங்கை மாற்றுவது என்னுடைய பாணி. இதனால் சக வீரர்கள் எரிச்சல் ஊட்டும் ஒரு கேப்டனாக நான் தெரியலாம். ஆனால் எனக்கு பில்டிங்கை மாற்ற வேண்டும் என உள்ளுணர்வு கூறினால் உடனே அதைக் கேட்டு நான் பில்டிங்கை மாற்றுவேன். அதனால்தான் எப்போதும் பில்டர்கள் என் மீது கண் வைக்க வேண்டும் என்றும் பில்டர்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோனி திடீர் திடீரென பீல்டர்களை மாற்றுவதற்கு பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என்றும், பேட்ஸ்மேன்கள் ஒரு பந்தை அடிக்கும் விதத்தை கணித்து அடுத்த பந்தும் அதே மாதிரி அடிப்பார் என்று யூகித்து தோனி பில்டிங்கை மாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
