புதன், 4 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (17:34 IST)

எம்ஜிஆர், ரஜினி போல் தோனியும் சூப்பர் ஹீரோ தான்.. பிரபல வர்ணனையாளர்..!

MS Dhoni
எம்ஜிஆர், ரஜினிகாந்த் போல் தோனியும் சூப்பர் ஹீரோ தான் என்று பிரபல வர்ணனையாளர் தெரிவித்துள்ளார். 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு கரகோஷம் எழுப்புவார்கள் என்பதும் தோனியை தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ரசிகர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இது குறித்து கூறிய போது ’தோனி பயிற்சி செய்யப் போகிறார் என தெரிந்தாலே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும்,  அவர் கிளவுஸ் மாட்டுவதை திரையில் காட்டும் போது மைதானத்தில் உச்சகட்ட சத்தம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார். 
 
எம்ஜிஆர் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை சூப்பர் ஹீரோக்காக தமிழர்கள் பார்த்து வருகிறார்கள் என்றும் அப்படி ஒரு சூப்பர் ஹீரோவாகவே தோனியை பார்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தோனிக்கு 75 வயது ஆகும் வரை சென்னை ரசிகர்கள் அவரை ஓய்வு பெற விடமாட்டார்கள் என்றும் ஏழாவது எட்டாவது அல்லது பத்தாவது கூட தோனி பேட்டிங் செய்ய வரட்டும், ஆனால் சிஎஸ்கே கேப்டனாக அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது என்று ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran