ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரங்கள்..டாடா-பிசிசிஐ அசத்தல் திட்டம்..!
நேற்று நடைபெற்ற போட்டியில் டாட் பால் வந்தபோதெல்லாம் மரம் காண்பிக்கப்பட்டது. இது எதற்காக என்று பலரும் குழப்பமான சூழ்நிலையில் இருந்ததை அடுத்து இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நேற்றைய போட்டியில் பந்து பேச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு டாட்பாலுக்கும் 500 மரங்கள் நடுவதற்கு டாடா மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து நேற்று நடைபெற்ற அத்தனை டாட் பால் பால்களையும் கணக்கிட்டு அதை 500 ஆல் பெருக்கி அத்தனை மரங்கள் இந்தியா முழுவதும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் சீசனை டாடா நிறுவனம் வழங்கி வரும் நிலையில் டாடா மற்றும் பிசிசிஐ ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இந்த மரங்களை நட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நேற்று அதிக அளவில் டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மரங்கள் நடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva