1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 மே 2023 (07:28 IST)

சென்னை அணியுடன் எப்போதும் இணைந்து இருப்பேன்: வெற்றிக்கு பின் தோனி பேட்டி..!

Thala Dhoni
சென்னை அணியுடன் எஎப்போதும் இருப்பேன் என்றும் அது ஆடும் லெவனாக இருந்தாலும் சரி அல்லது நிர்வாகத்தில் இருந்தாலும் சரி சென்னை அணியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்றும் நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பின்னர் தல தோனி தெரிவித்துள்ளார். 
 
நேற்று குஜராத் அணியுடன் ஆன போட்டியில் அபாரமாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை அடுத்து தோனி பேட்டி அளித்தார். அப்போது சென்னை அணியுடன் எப்போதும் இருப்பேன் என்றும் ஆடும் லெவனில் உள்ள வீரராக அல்லது அணி நிர்வாகத்துடன் இணைந்து இருப்பேன் என்றும் தெரிவித்தார்
 
மேலும் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடுவது குறித்து இன்னும் யோசிக்கவில்லை என்று கூறிய அவர்  அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து டிசம்பரில் முடிவெடுப்பேன் என்றும் அதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இப்போதே எதையும் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். 
 
டிசம்பர் மாதம் மினி ஏலம் முடிந்தவுடன் அப்போது இருக்கும் உடல் தகுதியை வைத்து அடுத்த சீசனில் விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பேன் என்றும் தோனி தெரிவித்தார். 
 
மேலும் நான் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்யவில்லை என்பதால் ஐபிஎல் தொடர் முடிந்ததும் குடும்பத்துடன் செலவு செய்ய முடிவு செய்திருக்கேன் என்றும் தெரிவித்தார். 
 
சென்னை அணியை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றும் சென்னை அணிக்காக நான் எப்போதும் இருப்பேன் என்றும் தோனி கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva