திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (08:43 IST)

இஷாந்த் ஷர்மாவின் வேகத்துக்குப் பணிந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் – இரண்டாம் நாளில் இந்தியா முன்னிலை !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்தியாவின் இஷாந்த் ஷர்மா அபாரமாக வீசி ஐந்து விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸை அணியை ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் வென்ற இந்திய அணி இப்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கோஹ்லி, புஜாரா, மயங்க் அகர்வால் போன்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்ற ரஹானே, ஜடேஜா, ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் இந்திய முதல் இன்னிங்ஸில் 298 ரன்களை சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமா ரோச் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பிறகு தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பவுலர்களின் தாக்கத்தால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. குறிப்பாக இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் தங்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினர்.  இதனால் அனைத்து பேட்ஸ்மேன்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த அணியின் ரோஸ்டன் ச்சேஸ் 48 ரன்களும், ஹெட்மெயிர் 35 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை சேர்த்தது. இந்திய அணித் தரப்பில் அபாரமாக வீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார். பூம்ரா,ஷமி மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.