புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:40 IST)

டுவிட்டரில் ’கிங்’ ஆன அஜித்... இந்திய அளவில் ஹேஸ்டேக்கில் ’விஸ்வாசம்’ முதலிடம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது தனது கடினமான உழைப்பால் நடிகராக உயர்துள்ளார். அதனால் இவருக்கு ரசிகர்களும் அதிகம். இந்நிலையில் நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்கில் விஸ்வாசம் முதலிடம் பிடித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் உலகில்,நாட்டில் எந்தப் பிரச்சனை  அதிகம் தாக்கம் ஏற்படுத்துகிறது, என்பதை அறிய சமூக வலைதளங்களை உற்றுப் பார்த்தாலே போதும். அதில் நெட்டிஷன்கள் அதிரிபுதிரியான விசயங்களை டிரெண்டாக்கி விடுகின்றனர். அதிலும் முக்கியமாக தங்களுக்குப் பிடித்த நடிகரின் படங்களை கொண்டாடி அதையும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்குவது வாடிக்கையாக உள்ளது.
 
இவ்வருடத்தில் தொடக்கத்தில் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம்  மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. 
அதில், 
1) விஸ்வாசம் (#viswasam) முதலிடம் பிடித்துள்ளது. 
2) நாடாளுமன்ற தேர்தல் (# LokSabhaElection2019)
3)கிரிக்கெட்  உலகக் கோப்பை #CWC19)
4) மஹர்சி(#Maharshi)
5)புதிய முகப்பு புகைப்படம் (#NewProfilePic)ஆகியவை முதல்  இடங்களை பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.