வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (17:32 IST)

சிஏஏ குறித்து விராட் கோலி பேசியது என்ன?

குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது.   
 
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
இதற்கு அவர், இந்திய குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.