வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (17:11 IST)

முதல்வரை பதவி நீக்கம் செய்ய... நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாஜக மத்திய அரசால், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேற்கு வங்க முதல்வர் மமதா தலைமையில் அம்மாநிலத்தில் பேரணி நடைபெற்றது.அதையடுத்து, இந்திய குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் ஐநா கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அவர் கூறினார்.
 
இந்த விவகாரத்தில்,ஐநா கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென   மேற்கு வங்க முதல்வர் மமதா கூறியதற்கு, அவரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு  உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.