1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2018 (15:49 IST)

நடுவர்களை அவமானப்படுத்திய கோலிக்கு அபராதம்; ஐசிசி அதிரடி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் தவறாக கொண்ட காரணத்திற்காக ஐசிசி அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்துள்ளது.

 
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென் அப்பரிக்க அணி 335 ரன்கள் குவித்தது. இந்திய அணி 307 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து தென் ஆப்பரிக்க அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 
 
நேற்றைய மூன்றாவது நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மைதானத்தில் ஒழுங்கினமான நடந்துக்கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்து சேதமடைந்துள்ளதாக கூறி நடுவர்களிடம் கோலி வலியுறுத்தியுள்ளார்.
 
அதற்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், கோலி கோபத்தில் பந்தை கீழே தூக்கிப்போட்டார். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்வது நடுவர்கள் அளித்த புகாரின்பேரில் ஐசிசி விசாரணை நடத்தியது. 
 
கோலி நடுவரிடம் அவமரியாதையாக நடந்துக்கொண்டதை உறுதி செய்து அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25% பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.