தொடர்புடைய செய்திகள்
- இன்று 2வது டெஸ்ட் போட்டி: தொடரை வெல்லுமா தென்னாப்பிரிக்கா?
- இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பிட்காயின்: அதிர்ச்சியில் மத்திய அரசு!!
- தென்னாப்பிரிக்க தொடர்: இந்திய வீரர்களுக்கு சேவாக் ஆலோசனை!
- 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அயர்லாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி
- மீண்டும் புழக்கத்திற்கு வந்திருக்கும் ஒரு ரூபாய் நோட்டு
எப்பவுமே பலிகடா இவர்தான்; முன்னாள் கேப்டன் வருத்தம்
இந்திய அணியின் பலிகடா எப்பவுமே தவான்தான் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவானுக்கு பதிலாக ராகுல், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, சாஹாவுக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது:-
இந்திய அணியின் பலிகடா எப்பவுமே தவான்தான். ஒரே ஒரு மோசமான போட்டி போதும் அவரை வெளியேற்ற. அதான் தற்போது நடந்துள்ளது. ஆனால் கேப்டவுனில் முதல் நாளில் 3 விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் குமாரை நீக்க அவசியமில்லை. பும்ரா அல்லது ஷமிக்கு பதிலாக இஷாந்தை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
