திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2018 (14:28 IST)

கோலி சதம்; நிலைக்குமா இந்திய அணியின் போராட்டம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளான இன்று இந்திய அணியின்
கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார்.

 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 335 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை தவித்தது. 
 
பின்னர் தொடக்க வீரரான முரளி விஜய் மற்றும் கோலி இருவரும் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 46 ரன்கள் எடுத்திருந்த போது வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
கேப்டன் கோலி மட்டும் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சதம் விளாசிய கோலி 103 ரன்களுடன் களத்தில் போராடி வருகிறார்.