1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (21:49 IST)

விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு இத்தாலி நாட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். அதேபோல் இம்முறையும், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட உடன் இருவரும் இடையே திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது.
 
ஆனால் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இத்தாலியில் உள்ள இத்தாலி நாட்டின் டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற போர்கோ பினோசிட்டோ ரிசார்ட்டில் விராட் கோலி-அனுஷ்கா திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.