1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (16:29 IST)

இரண்டாவது இடத்தில் இருந்தால் என்ன? கோலிதான் பெஸ்ட் - டிராவிட்

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை விட இந்திய கேப்டன் விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சர்வதேச டெஸ்ட் அரங்கில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இவர் தற்போது யார் சிறந்த பேட்ஸ்மேன் என தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவருமே எல்லா கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பாக செயல்படும் திறமை படைத்தவர்கள். ஆனால் கோலி தற்போது தனது பார்மின் உச்சத்தில் உள்ளார். மூன்றுவிதமான கிரிக்கெட்டுக்கும் ஏற்ப மாற்றிக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. என்னை பொறுத்தவரையில் ஸ்மித்தை விட கோலி ஒருபடி மேல்தான் என்றார்.
 
சமீபத்தில் வெளியான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி முதல் இடத்தை பிடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் மற்றும் மேத்யூ ஹேடன் ஆகியோருக்கு அடுத்து எல்லா கிரிக்கெட்டிலும் முதல் இடம் பிடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
 
விராட் கோலி தற்போது நல்ல பார்மில் உள்ளதால் அனைத்து தரப்பான போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வேகமாக ரன்களை குவித்து முந்தைய ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார். இதனால் இவரை தற்போது எல்லோரும் ரன் மெஷின் என அழைத்து வருகின்றனர்.