புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:02 IST)

விராட் கோலி - அனுஷ்கா சர்மா : இத்தாலியில் திருமணம்?

இந்திய கிரிக்கெட் வீர விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் இத்தாலியில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது ஊரறிந்த செய்தி. ஆனாலும், அதை அவர்கள் இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. சமீபத்தில் அவர்களின் திருமணம் இத்தாலியில் நடக்கிறது என செய்தி வெளியானது. ஆனால், அனுஷ்காவின் செய்தி தொடர்பாளர் அதை மறுத்தார். ஆனாலும், அது தொடர்பாக சில ரகசிய தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. 
 
விராட் கோலியும், அனுஷ்காவும் தற்போது திருமணத்திற்காக இத்தாலி சென்றுவிட்டனர். அவர்களின் இருவரின் குடும்பத்தினரும் அங்கு சென்றுவிட்டனர். அனுஷ்கா சர்மாவின் குடும்ப மதகுரு மகராஜ் ஆனந்த் பாபு மற்றும் விராட் கோலியின் நெருங்கிய உறவினர் வட்டாரங்கள் அனைவரும் இத்தாலி சென்றுள்ளனர். எனவே, அவர்களுடைய திருமணம் டிசம்பர் 9,12 அல்லது 18ம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக வருகிற 12ம் தேதி அவர்களின் திருமணம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த தகவல் உண்மையானதுதான் என விராட் கோலிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கூறிவருவதாக கூறப்படுகிறது.