வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (14:10 IST)

40 ரன்களுக்குள் காலி செய்ய நினைத்தோம்; இலங்கை வேகப்பந்து வீச்சாளர்

29 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தவித்த இந்தியாவை 40 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தோம் என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மல் கூறியுள்ளார்.

 
இந்தியா - இலங்கை இடையே முதல் ஒருநாள் போட்டி நேற்று தர்மசாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதல் களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாட்டை வெளிபடுத்தியது. தோனி மட்டும் ஒருபக்கம் களத்தில் போராடி அரைசதம் அடித்தார். 
 
இதனால் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 112 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. அபாரமாக பந்து வீசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
 
இந்நிலையில் லக்மல் கூறியுள்ளதாவது:
 
இந்திய அணி 29 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தபோது, 40 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தோம். ஆனால் தோனி சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரை மட்டும் விரைவில் வீழ்த்தியிருந்தால் நாங்கள் இந்தியாவை மோசமான ரன்களுக்குள் சுருட்டியிருப்போம் என்று கூறியுள்ளார்.