திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஜனவரி 2020 (12:50 IST)

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருதுகள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மாவுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை அடுத்து விருதுகள் பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
கடந்த 2019 ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
இந்த தகவலை ஐசிசி சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமின்றி விராத் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் ஒரே நேரத்தில் விருதுகளை பெற்றுள்ளது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது