டாஸ் வென்ற விராத் கோஹ்லி: மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்!

Last Modified ஞாயிறு, 5 ஜனவரி 2020 (19:57 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் தொடங்குகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் டி20 போட்டி கெளஹாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு சற்று முன் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச செய்ய முடிவு செய்தார்
ஆனால் கெளஹாத்தியில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் போட்டி தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்

இலங்கை அணி: ஃபெர்னாண்டோ, குனதிலகா, பெராரே, ஒஷாடா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்சே, டிசில்வா, டசன் ஷங்கா, உடானா, ஹசரங்கா, லஹிரு குமாரா மற்றும் லசித் மலிஙா
இந்திய அணி: ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, சயினி


இதில் மேலும் படிக்கவும் :