1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya explanation to Tilak varma retired hurt decision

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

மும்பை இந்தியன்ஸ்
18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி கடைசி வரை பரபரப்பான ஒன்றாக சென்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டும் சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் மும்பை அணி எடுத்த ஒரு தவறான முடிவுதான் அவர்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அது என்னவென்றால் வழக்கமாக அதிரடியாக ஆடும் திலக் வர்மா இந்த போட்டியில் பந்தை கனெக்ட் செய்ய முடியாமல் போராடினார். அவர் 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதனால் அவரை 19 ஆவது ஓவரில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியே அனுப்பிவிட்டு, மிட்செல் சாண்ட்னரை இறக்கினர். இதுதான் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனென்றால் திலக் வர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் எந்த வொரு வினாடியிலும் பவுண்டரிகளை அடிக்கும் திறனை பெற்றுவிடுவார். அதனால் அவரை அனுப்பிவிட்டு சாண்ட்னரை இறக்கியது முட்டாள் தனமான முடிவு என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த முடிவுக்கு போட்டி முடிந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் விளக்கமளித்துள்ளார்.

அதில் “இறுதிக் கட்டத்தில் எங்களுக்கு சில பெரிய ஷாட்கள் தேவைப்பட்டன. அதனால் அந்த முடிவை எடுத்தோம். கிரிக்கெட்டில் சில நாட்கள் நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது வெற்றிகரமாக அமையாது. எங்களுக்கு இன்று அப்படியான ஒரு நாள்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!