இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி:

Last Modified செவ்வாய், 7 ஜனவரி 2020 (22:10 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. இதனை அடுத்து 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது
ஸ்கோர் விவரம்

இலங்கை அணி: 142/9

பெராரே: 34
ஃபெர்னாண்டோ: 22
குனதிலகா: 20
டிசில்வா:17

இந்திய அணி: 144/3

கே.எல்.ராகுல்: 45
தவான்: 32
ஸ்ரேயாஸ் அய்யர்: 34
விராத் கோஹ்லி: 30


இதில் மேலும் படிக்கவும் :