1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (22:23 IST)

என் குடும்பத்தை தயவுசெய்து இழுக்காதீர்கள்: விமர்சகர்களுக்கு ரோஹித் சர்மா வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணி முன்ன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதை அடுத்து அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சர்ச்சைக்குரிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரோஹித் சர்மா கூறியதாவது:
 
ஐ.சி.சி உலகக் கோப்பைக்குப் பின்னர் வெடித்த சர்ச்சை குறித்து அவர் பேசுகையில், மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினரை நிர்ணயிக்கப்பட்ட நாட்களை தாண்டி தங்களுடன் தங்க வைப்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தன. அதில் குடும்பத்தினர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதுதான் வேதனையாகப்படுகிறது என ரோஹித் கூறியுள்ளார்.
 
எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவும்தான் இருக்கின்றனர். என் குடும்ப விஷயங்கள் பற்றி எழுதப்பட்டிருப்பதை, என் நண்பர்கள் மூலம் அறிந்தே.  இந்த விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது
 
தயவுசெய்து என் குடும்பத்தை இழுத்தார்கள். நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் எனது குடும்பத்தினரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். அப்படி பேசுபவர்கள் உண்மையிலேயே வேறு எதைப் பற்றியும் அக்கறை காட்டாதவர்கள் என்றுதான் அர்த்தம் என்று சற்று காட்டமாகவே கூறியுள்ளார்.