ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 அக்டோபர் 2020 (11:03 IST)

ஓய்வு பெற்றார் பாகிஸ்தான் வீரர் உமர் குல் – ரசிகர்கள் வாழ்த்து!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதாகும் உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக 2003ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 179 விக்கெட்டுகளையும் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 163 விக்கெட்டுகளையும், 60 டி20 சர்வதேசப் போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய வீரர் என்ற பெருமைக்குரியவர் குல்.

2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகக் கடைசியாக சர்வதேசப் போட்டியில் விளையாடிய குல் அதன் பின்னர் உள்ளூர் தொடர்களில் மட்டுமே விளையாடி வந்தார். இதையடுத்து இப்போது அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு ரசிகர்களும் சக கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.