வெளிநாட்டில் இருந்து வந்த கணவன்… அவரோடு செல்ல மறுத்த மனைவி – இறுதியில் நடந்த விபரீதம்!

Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (10:10 IST)

தேனி மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நபர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு கடந்த ஆண்டு ஜெயபிரியா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது. அதன் பின்னரும் கோபிநாத் சவுதிக்கே சென்று ஓராண்டு கழித்து இப்போது வந்துள்ளார். இதையடுத்து மனைவியை அழைத்துச் செல்ல அவர் வீட்டுக்கு செல்ல மனைவியோ அவரோடு வரமாட்டேன் என சொல்லியுள்ளார். மேலும் அவருடைய பெற்றோரும் அவரைத் திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் வீட்டுக்கு வந்து யாருமில்லாத போது அறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக தகவல் அறிந்த போலிசார் அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது அறையில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் எடுத்துள்ளனர். அதில் தன் சாவுக்கு காரணமான ஏழு பேரும் தண்டிக்கப்பட்ட பிறகே தனது சடலத்தை எரிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :