மலையாளத்தில் நித்யா மேனனுடன் நடிக்கும் விஜய் சேதுபதி! எந்த படத்தின் ரீமேக் தெரியுமா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு மலையாளப் படத்தில் நடித்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிப் படங்களில் பிரதானமாக நடித்து வந்தாலும் நட்பின் அடிப்படையில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சைரா நரசிம்மா ரெட்டி மற்றும் மார்க்கோனி மாத்தாய் ஆகிய படங்களே இதற்கு உதாரணம்.
இந்நிலையில் இப்போது மேலும் ஒரு மலையாளப்படத்தில் நடிகை நித்யா மேனனுடன் நடிக்க உள்ளார். இது விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் ஜானு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.