1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ration shops holliday today

இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – ஏன் தெரியுமா?

ரேஷன் கடை
இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நியாய விலை கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை நாட்களிலும் வேலை செய்தனர். அப்படி அவர்கள் தங்கள் விடுப்பு நாட்களான ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டோக்கன் வழங்கினர். அதனால் அந்த வேலை நாட்களுக்குப் பதிலாக செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்தது.

அதை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் ஊழியர்களின் விடுப்பு என்பதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது.