வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (19:51 IST)

12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த உபி அணி.. பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று உத்தர பிரதேச மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் உத்தர பிரதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெங்களூர் அணி வீராங்கனைகளின் அதிரடி பந்துவீச்சு காரணமாக உத்தர பிரதேச ஆணி 13 ரன்களில் மூன்று விக்கெட்டை இழந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியின் சோபியா இரண்டு விக்கட்டைகளையும் மேகன் விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாத நிலையில் இன்றைய போட்டியில் அந்த அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva