செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2023 (14:53 IST)

ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகலா? அதிர்ச்சி தகவல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமான ஸ்ரேயாஸ் ஐயருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் ஐபிஎல் தொடரின் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயா ஐயர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரிலும் ஒரு சில போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva