1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified திங்கள், 13 மார்ச் 2023 (23:20 IST)

மகளிர் ஐபிஎல்-2023- பெங்களூரை வீழ்த்தியது டெல்லி அணி!

delhi- Bangalore
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், டெல்லி அணிக்கு எதிராக பெங்களூரு விளையாடியது.

இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, 151 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீராங்கனை டக் அவுட்டானார். பின்னர் ரோற்றிகாஸ் 32 ரன்களும், லேனிங் 15 ரன்களும் அடித்தனர்.

கடைசி ஓவரில் 4 வது பந்தில் பவுண்டரிக்கு அடித்து, டெல்லி அணியின் வெற்றிக்கு ஜோனாசன்(29 ரன்கள்)  உதவினார்.  4 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி 154  ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.