1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2023 (19:27 IST)

மகளிர் ஐபிஎல்: மும்பைக்கு இன்று 5வது வெற்றி கிடைக்குமா? குஜராத் உடன் மோதல்..!

மகளிர் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெறும் 12 வது போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மும்பை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய கலந்த பிறகு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது அடுத்து இன்று ஐந்தாவது போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குஜராத் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உள்ளதால் அந்த அணி வெற்றி பெற்றால் மேலும் இரண்டு புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva