திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (08:18 IST)

இன்று இந்தியா -இலங்கை ஒருநாள் போட்டி: வெற்றி யாருக்கு?

srilanka
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என ரசிகர்கள் எதிர்பார்ப்பு உள்ளது. 
 
இந்திய அணி ரோகித் சர்மா, விராத் கோலி, சூர்யகுமார் யாதவ், உள்ளிட்ட வீரர்களால் பலம் பொருந்தி அணியாக உள்ளது அதேபோல் பந்துவீச்சில் அர்ஷ்தீப், முகமது சிராஜ், முகமது ஷமி, அக்ஷர் பட்டேல், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் மிரட்டுகின்றனர்
 
எனவே 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போலவே ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இலங்கை அணியின் ஷனகா, ஹசரங்கா
 ஆகிய ஆல்ரவுண்டர் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறார்கள் என்றும் இலங்கை பந்து வீச்சையும் குறை சொல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது.
 
எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்றும் இன்றைய தினத்தில் நன்றாக விளையாடும் அணி வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை 162 ஒருநாள் போட்டிகளில் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் அதில் 93ல் இந்தியாவும் 57ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva